கிரீஸில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.
கிரீஸில் கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 57 பேர் உயிரிழந்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக ரயில்வே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ரயில் விபத்து சம்பவத்தில் ஆளும் அரசு ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கூறி, பொதுமக்கள் தன்னெழுச்சியாக சாலையில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீஸாரை நோக்கி பொதுமக்கள் பெட்ரோல் குண்டு வீசியதாலும், பதிலுக்கு போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாலும் அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.