வெளிநாட்டு மதுபானங்களை முறைகேடாக இறக்குமதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக, சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்றது.
வெளிநாட்டு மதுபானங்களை முறைகேடாக இறக்குமதி செய்து டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதனிடையே, செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறையினர் புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்திருப்பதாகவும், இந்த வழக்கில் தனியார் மதுபான நிறுவனங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மதுபான ஆலை உரிமையாளர் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.