சென்னை மண்ணடியில் உள்ள SDPI கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
SDPI கட்சியின் தேசிய தலைவரான ஃபைஸி மீது பண மோசடி புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த மாதம் கேரளாவில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை மண்ணடியில் உள்ள SDPI மாநில தலைமை அலுவலகத்தில் 15 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ பாதுகாப்புடன் சோதனை நடைபெற்ற நிலையில், அலுவலகம் முன்பு கட்சி தொண்டர்கள் அதிகளவில் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.