அரக்கோணம் அருகே நடைபெறும் மத்திய தொழில் பாதுகாப்பு படை 56-ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தக்கோலம் வந்தடைந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள சிஐஎஸ்எஃப் பயிற்சி மையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 56-ஆம் ஆண்டு தொடக்க தின விழா நடைபெறுகிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கலந்து கொள்கிறார்.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக அமித் ஷா டெல்லியிலிருந்து இந்திய எல்லை பாதுகாப்புப் படை விமானம் மூலம் நேற்று இரவு 9.05 மணிக்கு அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்திற்கு வந்தடைந்தாா். அங்கிருந்து சாலை மாா்க்கமாக தக்கோலம் சிஐஎஸ்எப் மண்டல பயிற்சி மையத்துக்கு அவர் சென்றார்.