தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அவசியம் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், அதங்கோடு பகுதியில் அமைந்துள்ள மாயகிருஷ்ணன் சுவாமி கோயிலில் 100-வது ஆண்டு ரோகிணி திருவிழா மற்றும் இந்து சமய மாநாடு விமர்சையாக நடைபெற்றது.
இதில் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியர்களை பல ஆண்டுகளாக அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களின் மொழியை கற்பதை தவிர்த்து வேறு எந்த மொழியை வேண்டுமானாலும் கற்கலாம் என்றார்.
யார் எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம் என கருத்து தெரிவித்த அவர், தமிழகத்திற்கு மும்மொழிக் கொள்கை அவசியம் எனவும் தெரிவித்தார்.