திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழாவின் 4-ம் நாளில் சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
முன்னதாக சுவாமிக்கும் அம்பாளுக்கும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுவாமி குமரவிடங்கப் பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், தெய்வானை அம்மாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளினர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 12-ஆம் தேதி நடைபெறுகிறது.