மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பிற்கு நிதி திரட்டும் விதமாக சென்னை முதல் கோவா வரை ஆட்டோ பேரணி தொடங்கியது.
மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பிற்கு நிதி திரட்டும் விதமாக சென்னை முதல் கோவா வரை ரிக்ஷா ரேலி நடைபெறுகிறது. தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் சேவா சாதன் பள்ளியில் இருந்து இந்த ஆட்டோ பேரணியானது தொடங்கியது.
இதில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 54 பெண் தொழிலதிபர்கள் 18 ஆட்டோக்களில் ஆயிரம் கி.மீ தொலைதூரத்திற்கு பேரணி செல்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மெட்ராஸ் மிட்டவுன் ரவுண்ட் டேபிள் , மெட்ராஸ் மிட்டவுன் லேடீஸ் சர்க்கிள் ஆகிய அமைப்புகள் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.