திருவண்ணாமலை மாவட்டம், வடுகசாத்து அருகே எலி மருந்து குடித்து கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.
சேர்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜாராமன் – சாமுண்டீஸ்வரி தம்பதியினர் இரவு உறங்க சென்றபோது எலி மருந்தை உட்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் கணவன் , மனைவி இருவரும் உயிரிழந்தது குறித்து அறிந்த காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் எலி மருந்து குடித்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.