சென்னை அடுத்த எண்ணூரில் தந்தையை சுத்தியால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
சத்தியவாணி முத்து நகரில் வசித்து வரும் கூலித் தொழிலாளியான முருகன், தனது 2-வது மகன் பிரபாகரனிடம் மது அருந்த பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார்.
பிரபாகரன் பணம் தர மறுக்கவே ஆத்திரமடைந்த முருகன், வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து வந்து மகனை தாக்க முயன்றுள்ளார்.
அப்போது அதை பிடுங்கிய பிரபாகரன் தந்தை முருகனை தலை மற்றும் காது பகுதியில் சுத்தியலால் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.