ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே, மர்ம விலங்கு கடித்து உயிரிழந்த ஆடுகளை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
ஓலப்பாளையம் பகுதியில் சென்னியப்பன் என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 28 ஆடுகளை மர்ம விலங்கு கடித்ததில் 18 ஆடுகள் உயிரிழந்தன.
இச்சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பது தொடர்கதையாகி வருவதாக கூறி, விவசாயிகள் உயிரிழந்த ஆடுகளுடன் பெருந்துறை தாலுகா அலுவலகத்திற்கு செல்ல முயன்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.