கர்நாடக மாநிலம், மாலூர் அருகே காதலனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு பெண் ஒருவர் கோயில் உண்டியலில் கடிதம் போட்டுள்ளார்.
சிக்கதிருப்பதியில் உள்ள பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.
இதில் 49 லட்சம் ரூபாய் ரொக்கம் காணிக்கையாக கிடைத்துள்ள நிலையில், ஒரு பெண் எழுதிய கடிதமும் கிடைத்தது. அதில் தனது காதலனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு பெண் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.