கனடா, மெக்சிகோ மீதான 25% வரிகளை ஏப்ரல் 2ம் தேதி வரை அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுத்தி வைத்தார்.
மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக டிரம்ப் அறிவித்தார். அதனைதொடர்ந்து இந்த இரு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதிக்கும் உத்தரவை, டிரம்ப் மார்ச் 4ம் தேதி பிறப்பித்தார்.
இந்த சூழலில், 25% வரிகளை ஏப்ரல் 2ம் தேதி வரை டிரம்ப் நிறுத்தி வைத்தார். இதை அடுத்து அமெரிக்கப் பொருட்கள் மீதான கூடுதல் வரிகளை ஏப்ரல் 2ம் தேதி வரை கனடா ஒத்திவைத்துள்ளது.