தாம் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி கூறி போப் பிரான்சிஸ் ஆடியோ வெளியிட்டுள்ளார்.
88 வயதான போப் பிரான்சிஸ் சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சுவாச பாதையில் தொற்று ஏற்பட்டு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், தனக்காக பிரார்த்தனை செய்பவர்களுக்கு நன்றி தெரிவித்து போப் பிரான்சிஸ் பேசும் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது.