தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த மூதாட்டியின் உடலில் இருந்து தங்க நகையை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், போடி அருகே உடல்நலக்குறைவால் அவதிபட்ட கமலம் என்ற மூதாட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூதாட்டி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து சிகிச்சை அறையில் வைக்கப்பட்டிருந்த மூதாட்டியின் உடலில் இருந்து 4 சவரன் நகை காணாமல் போனது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் மூதாட்டியின் கழுத்தில் இருந்து 4 சவரன் நகைகளை பெண் ஒருவர் திருடி சென்றது பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் நந்தினி என்ற பெண்ணை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி அவரை சிறையில் அடைத்தனர்.