சேலத்தில் உள்ள சுகவனேஸ்வரர் கோயில் தெப்பகுளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
சேலம் டவுன் பகுதியில் அமைந்துள்ள சுகனேஸ்வரர் கோயிலில் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம், அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் கோயிலில் உள்ள தெப்பக்குளத்தில் இறங்கி தீர்த்த நீரை எடுத்துச் செல்வதையும் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் வெயில் தாக்கத்தால் குளத்தில் உள்ள மீன்கள் செத்து கரை ஒதுங்கி காணப்படுகிறது. இதனால் தெப்பக்குளம் மற்றும் கோவில் முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மேலும் குளத்தில் குப்பைக் கழிவுகள் வீசப்படுவதால் தான் மீன்கள் இறப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே குளத்தை சுத்தம் செய்து கூடுதலாக நீர் நிரப்ப வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.