போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் இன்று முதல் ஊதியம் வழங்கப்படும் என சாம்சங் நிர்வாகம் அறிவித்ததால் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் இயங்கிவரும் சாம்சங் தொழிற்சாலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால், ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக 23 சிஐடியு தொழிற்சங்க ஊழியர்களை சாம்சங் நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இதனை எதிர்த்து மீண்டும் ஊழியர்கள் தொடர் போராட்டத்தை தொடங்கினர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இன்று முதல் ஊதியம் வழங்கப்படும் எனவும், பயிற்சி வழங்கப்பட்டு பணியில் சேர்க்கப்படுவார்கள் எனவும் சாம்சங் நிர்வாகம் அறிவித்தது. இதனால் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.