மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்திற்கு பொதுமக்கள் பெருமளவில் ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
மருத்துவம், தொழில்நுட்ப கல்வியை தமிழில் கற்றுக் கொடுக்க அமித்ஷா வலியுறுத்தி உள்ளார் என்றும், முதல்வர் ஸ்டாலினுக்கு 2வது முறையாக மத்திய அமைச்சர் அமித்ஷா கோரிக்கை விடுத்துள்ளார் என அண்ணாமலை தெரிவித்தார்.
நாட்டிலேயே முதல் முறையாக CISF பயிற்சி மையத்திற்கு ராஜாதித்த சோழன் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தி மொழியில் மருத்துவக் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது என தெரிவித்தார்.
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவின் கையெழுத்து இயக்கத்திற்கு சாமானியர்கள் பெருமளவில் ஆதரவு தெரிவித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மத்தியஅரசு ரூ.10,000 கோடி கொடுத்தால், 50%கமிஷன் அடிக்கலாம் என நினைக்கும் அமைச்சர்கள் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.
10 மொழி கற்றுக் கொடுப்பேன் என்று ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியது வரவேற்கத்தக்கது என அண்ணாமலை தெரிவித்தார்.