சர்வதேச மகளிர் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் சமூக பொருளாதார நிலைகளை மேம்படுத்த இன்னும் நிறைய விசயங்களை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு பெண்களே அடித்தளம் ஆக உள்ளனர் எனவும் இன்னல்கள் மற்றும் சவால்களை எதிர்கொண்டபோதும் பல்வேறு துறைகளில் அடையாளங்களை பதித்து வெற்றி கண்டுள்ளனர் எனவும் பெருமிதம் தெரிவித்தார். ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக உணரும் வகையிலான சமூகத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்போம் எனவும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.