நெருக்கடியான சூழலில் பெண்கள் எடுக்கும் முடிவுதான் சரியானதாக இருக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார்.
இதைத்தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், வீட்டின் தூண்களாக இருக்கும் பெண்கள், அமைதியின் திருவுறுவாக உள்ளதாக புகழாரம் சூட்டினார். நெருக்கடியான சூழலில் பெண்கள் எடுக்கும் முடிவுகளே சரியானதாக இருக்கும் என தெரிவித்த ஆளுநர் ரவி, தனது பால்ய வயதில் தன் தாய் பட்ட கஷ்டங்களை நினைவு கூர்ந்தார்.