தடைகளை தகர்த்து தவிடு பொடியாக்கி சாதனைகளாக தடம் பதிக்க அனைத்து மகளிரையும் வாழ்த்துவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவத்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், மார்ச் – 8 மகளிர் தினமாக இருப்பதை விட ஒவ்வொரு தினமும் மகளிருக்கான தினமாக இருக்க வேண்டும் என்பதே இன்று அனைவரும் விரும்புவது என தெரிவித்துள்ளார்.
இன்று பெண்கள் சிறப்பாக முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில் பெண்களுக்கு முழுமையான தடையில்லாத அடிப்படைக் கல்வி, மேல்நிலைக் கல்வி, வரதட்சணை இல்லாத திருமணங்கள், கலைக்கப்படாத பெண் சிசுக்கள்,பாலியல் தொந்தரவு இல்லாத தொழில் நிறுவனங்கள், பாரபட்சமில்லாத வாய்ப்புகள்,சமுதாய களம் மட்டுமல்ல,மனதளவில் கூட பெண்கள் மீது மரியாதை முழுமையாக கிடைக்கிறதோ அதுவே மகளிர் தினம் என்பதே சரியானதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இவையெல்லாம் முழுமையடைந்து ஒவ்வொரு நாளும் மகளிருக்கான தினமாக கொண்டாடப்பட வேண்டும் எனறும் அவர் தெரிவத்துள்ளார்.
பாரதப்பிரதமர் நரேந்திர மோடி தலைமை தலைமையிலான மத்திய அரசு மூலம் இந்த நம்பிக்கை பிறந்திருக்கிறது. பிறந்த பெண் என் பெருமை என்று செல்வமகள் சேமிப்பு திட்டத்தை ஏற்படுத்தியதிலிருந்து பெண்கள் பொருளாதாரத்திலும், தொழிலிலும் முத்திரை பதிக்க வேண்டும் என முத்ரா வங்கி திட்டம் கொண்டு வந்ததிலிருந்து பல பெண்களுக்கு அமைச்சரவையில் சவாலான துறைகளை அளித்ததிலிருந்து மகளிரின் நம்பிக்கை நட்சத்திரமாக பிரதமர் திரு.நரேந்திர மோடிதிகழ்வதகாவும் அவர் கூறியுள்ளார்.
இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி மகளிர் அனைவரும் நம்பிக்கையின் நட்சத்திரமாக ஒளிர இந்த மகளிர் தினத்தில் வாழ்த்துகிறேன் எனறும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.