இளையராஜாவால் இந்தியாவிற்கு பெருமை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா, லண்டனில் உள்ள ஈவென்டிம் அப்பல்லோவில் “வேலியண்ட்” என்ற தலைப்பில் தனது முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசையை அறிமுகப்படுத்த உள்ளார். இசையமைப்பாளர் மைக்கேல் டாம்ஸின் தலைமையில் ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவின் நிகழ்ச்சி மாரச் 8ஆம் தேதி இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் விடுத்துள்ள பதிவில், “பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது” என்றும், சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள் என தெரிவித்துள்ளார்.