அன்பு சகோதரிகளின் பாதுகாப்பிற்காக அதிமுக என்றைக்கும் போராடும் என முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலளாருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மகளிர் தினத்தையொட்டி எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அன்னை, ஆசிரியை, சகோதரி என்று வாழ்நாள் முழுவதும் பெண்கள் நம்மோடு பயணிக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
அதே சமயம், இன்றைக்கு தமிழகத்தில் பெண்களுக்கு துளி கூட பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறியிருப்பது மிகுந்த கவலைக்குரியது என தெரிவித்துள்ள அவர்,
சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கத் திராணியற்ற ஒரு ஆட்சியாக திமுக ஆட்சி இருப்பது வெட்கக்கேடானது எனக் குறிப்பிட்டுள்ள அவர், அன்புச் சகோதரிகளின் பாதுகாப்புக்காக என்றைக்கும் அதிமுக போராடும் என கூறியுள்ளார்.
மேலும், 2026ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் பெண்களின் அச்ச உணர்வு மாறும் எனக்கூறியுள்ள இபிஎஸ், பெண்கள் பாதுகாப்புடன், சுதந்திரமாக செயல்பட்டு, பல சாதனைகளைப் புரியும் காலமாக அதிமுக ஆட்சிகாலம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.