சென்னை பூந்தமல்லியில் மும்மொழிக் கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
கட்சி தலைமை அறிவுறுத்தல்படி மாவட்ட தலைவர் அஸ்வின் ராஜசிமா மகேந்திரா தலைமையில், பூந்தமல்லி நகர தலைவர் தங்கராஜ், நிகழ்ச்சி பொறுப்பாளர் முனியப்பன் உள்ளிட்டோர் இணைந்து நகர் பார்க் அருகே கையெழுத்து இயக்கத்தை நடத்தினர்.
இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று ஆர்வத்துடன் கையெழுத்திட்டு மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தனர்.