டி-72 ரக பீரங்கிகளுக்கு என்ஜின்களை கொள்முதல் செய்ய ரஷ்ய நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
2 ஆயிரத்து 156 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் மூலம், சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலைக்கு நவீன தொழில்நுட்பங்களை ரஷ்ய நிறுவனம் வழங்குகிறது.
இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தை மேலும் ஊக்குவிப்பதாக இது அமையும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.