டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற ஏர் இந்தியா விமானத்தில், முன்பதிவு செய்யப்பட்ட சக்கர நாற்காலி மறுக்கப்பட்டதால், 82 வயது மூதாட்டி ஒருவர் தவறி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தும் சக்கர நாற்காலி தரப்படாததால், குடும்பத்தினர் உதவியுடன் நடந்து சென்றபோது அந்த மூதாட்டி தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது.
மூதாட்டியின் கணவர் ராணுவ லெப்டினன்ட் ஜெனரலாக இருந்தவர் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மூதாட்டியின் பேத்தி வெளியிட்ட எக்ஸ் பதிவிற்கு பதிலளித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், மூதாட்டி விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளது.