கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த 4 பேரை சட்டப் பணிகள் ஆணையக் குழுவினர் மீட்டனர்.
சிங்காரப்பேட்டை அடுத்த ஓபிலிசாவலசை கிராமத்தைச் சேர்ந்த 21 பேர் போச்சம்பள்ளி அருகே உள்ள மடத்தானூர் கிராமத்தில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழுச் செயலாளர் நீதிபதி ஜெயந்தி நேரில் ஆய்வு செய்து, கொத்தடிமைகளாக இருந்த 21 பேரையும் மீட்டு அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக செங்கள் சூளை உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.