மதுரையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக மேடை அமைத்து திண்ணைப் பிரச்சாரம் செய்ததாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் சார்பு அணியான ஜெயலலிதா பேரவை சார்பில் வாரந்தோறும் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டு வீடு வீடாக செல்லும் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிக்கின்றனர்.
அந்த வகையில், மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் நடைபெற்ற திண்ணை பிரச்சாரத்தின்போது அனுமதியின்றி மேடை அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உட்பட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.