துறையூர் அருகே சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான இரட்டை சகோதரர்கள் தப்பியோட முயன்று கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் ஹரிஷ் மற்றும் ஹரிஹரன். இரட்டைச் சகோதரர்களான இவர்கள், அதே பகுதியை சேர்ந்த 11 மற்றும் 12 வயதுள்ள 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஹரிஷ் மற்றும் ஹரிஹரனை முசிறி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சிறையில் அடைப்பதற்காக அழைத்து சென்றபோது செவந்தலிங்கபுரம் பகுதியில் இருவரும் போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்றனர்.
அப்போது தடுமாறி கீழே விழுந்ததில் அவர்களின் காலில் முறிவு ஏற்பட்டது. பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவருக்கும் மாவுக்கட்டு போடப்பட்டது.