சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பெண் ஊழியர்கள் குடை பிடித்தபடி நடனமாடி மகிழ்ந்தனர்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழா நடைபெற்றது. இதில், ஆட்சியர் ஆசா அஜித் மற்றும் பெண் ஊழியர்கள் அனைவரும் ஒரே வண்ணத்தில் சேலை உடுத்திவந்து கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மகளிர் தின வாழ்த்திற்கான கையெழுத்து இயக்கத்தில் மாவட்ட ஆட்சியர் முதல் கையெழுத்திட்டார். தொடர்ந்து பெண் ஊழியர்கள் அனைவரும் குடையை சுற்றியபடி நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.