ஐதராபாத்தில் கணவருடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்த பெண்ணை, மனைவி வீடு புகுந்து தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள எல்.பி.நகரைச் சேர்ந்தவர்கள் பிரசாந்த் – ஸ்வேதா தம்பதியர். திருமணமாகி 12 ஆண்டுகள் ஆன இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வந்த சுவேதாவிற்கு கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை கண்காணிக்க தொடங்கிய ஸ்வேதா, பிரசாந்திற்கு தனியார் பள்ளி ஆசிரியையான வாணி என்ற பெண்ணுடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தார்.
பின்னர் கணவரை பின் தொடர்ந்து அவர்கள் தனியாக வசித்து வந்த வீட்டிற்கு சென்ற ஸ்வேதா, இருவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளார். இதனால் திடுக்கிட்ட பிரசாந்த், கழற்றிவிட்ட காலணியைக் கையில் எடுத்துக் கொண்டு சுவர் ஏறிக் குதித்து தப்பிச் சென்றார். தொடர்ந்து வாணி என்ற பெண்ணை பிடித்த ஸ்வேதா, அவரை சரமாரியாக தாக்கி, இருவர் மீதும் காவல் நிலையத்தில் மோசடி புகார் அளித்துள்ளார்.