உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்துவது எளிதல்ல என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரஷ்யாவுடன் இணைந்து அமெரிக்கா மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார்.
கீவ்-ஐ விட மாஸ்கோவை எளிதாக கையாளலாம் எனக் கூறிய அவர், ரஷ்யாவை விட உக்ரைனை சமாளிப்பது எளிதல்ல எனத் தெரிவித்தார். மேலும் உக்ரைனுக்கு செயற்கைக்கோள் புகைப்படங்கள் அனுப்புவதை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.