ஈராக்கில் பெய்த கனமழையால் அங்குள்ள சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறின.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த சில தினங்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அங்குள்ள சாலைகளில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியதால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்துள்ளனர்.
மேலும், சில பகுதிகளில் வாகனங்கள் நீரில் மூழ்கியதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.