கனடாவின் பால் பொருட்களுக்கு 250 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து இறக்குமதி வரிகளில் பல்வேறு மாற்றங்களை ட்ரம்ப் கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், கனடாவின் பால் பொருட்களுக்கான வரி விதிப்பை ஒரு மாதம் நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்த டொனால்டு ட்ரம்ப், தற்போது அதற்கு 250 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.