இந்தியா – சீனா இடையிலான உறவு முன்னேற்றம் அடைந்துள்ளதாக சீன வெளியறவுத்துறை அமைச்சர் WANG YI தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங்கில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரஷ்யாவில் நடைபெற்ற பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் இடையிலான சந்திப்பு இருதரப்பு உறவை வலுப்படுத்தியுள்ளதாக கூறினார்.
எல்லைப் பிரச்னையை மையமாகக் கொண்டு இருதரப்பு உறவை வரையறுக்கக்கூடாது எனக்கூறிய அவர், குறிப்பிட்ட சில வேறுபாடுகள் ஒட்டுமொத்த உறவையும் பாதிக்காது என தெரிவித்தார்.