SWIGGY, INSTAMART, BLINKIT, ZEPTO ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் கூட்டமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவில், SWIGGY, INSTAMART உள்ளிட்ட நிறுவனங்கள், நுகர்வு சந்தையை வேகமான தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வு சந்தையில் தங்கள் இருப்பை மட்டுமே உறுதி செய்யும் வகையில் இந்நிறுவனங்கள் செயல்பட்டு வருவது சிறு விற்பனையாளர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும்,
நாடு முழுவதும் 1 கோடிக்கும் அதிகமான சிறு விற்பனையாளர்கள் மற்றும் சில்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரம் சிதைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே, டிஜிட்டல் சந்தைகளை மதிப்பீடு செய்து உரிய முறையில் ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும் வணிக பயன்பாட்டுக்கு தனியார் வாகனங்களை இச்செயலிகள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.