மணிப்பூரின் பல்வேறு இடங்களில் பதுக்கி வைப்பப்பட்டிருந்த 114 ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
மணிப்பூரில் பொதுமக்கள் வைத்திருந்த ஆயுதங்களை ஒப்படைக்க பாதுகாப்பு படையினர் 2 வார கால அவகாசம் வழங்கினர். கால அவகாசம் முடிவந்த பின்னர் உளவுத்துறை வழங்கிய தகவலின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வெவ்வேறு பகுதிகளில் இருந்து கையெறி குண்டுகள் உள்ளிட்ட 114 ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.