ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் அதிகபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸ்சை எட்டியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பனிப்பொழிவு கடுமையாக இருந்தது. மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்து வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்க தொடங்கிய சூழலில், தற்போது அதிகபட்ச வெப்பநிலை 16 டிகிரியை எட்டியுள்ளது.
டால் ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது.