தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் டைவ் அடித்து பந்தை பிடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஓய்வுபெற்ற வீரர்களுக்கான மாஸ்டர்ஸ் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தியபோது, பவுன்டரி நோக்கி அதிவேகமாக சென்ற பந்தை JONTY RHODES டைவ் அடித்து தடுத்து நிறுத்தினார்.
தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடிய காலத்தில் தலைசிறந்த ஃபீல்டராக JONTY RHODES திகழ்ந்த நிலையில், 54 வயதிலும் அவர் அந்தரத்தில் பறந்து ஃபீல்டிங் செய்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.