உத்தரபிரதேசத்தில் புதிதாக அமையவுள்ள மைக்ரோசாஃப்ட் வளாகத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார்.
நொய்டாவின் 145வது செக்டாரில் புதிதாக மைக்ரோசாஃப்ட் வளாகம் அமையவுள்ளது. இதற்கு அடிக்கல் நாட்டிய பின் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இளைஞர்களுக்கு தேவையான தொழில்நுட்ப கொள்கைகளை உத்தர பிரதேச அரசு வகுத்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், பல்வேறு சாதனைகளை புரியும் மாநிலமாக உத்தரபிரதேசம் மாறி வருகிறது எனவும் யோகி ஆதித்யநாத் கூறினார்.