நாட்டிலுள்ள பரபரப்பான ரயில் நிலையங்களுக்கு வெளியே நிரந்தர காத்திருப்பு மையங்கள் அமைக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
மகா கும்பமேளாவின்போது ஏற்பட்ட நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு ரயில்வே துறை இந்த முடிவை எடுத்துள்ளது.
முதற்கட்டமாக 60 ரயில் நிலையங்களில் நிரந்தர காத்திருப்பு மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ள ரயில்வே அமைச்சகம், ரயில்கள் வந்தடையும் நேரத்தில் மட்டுமே நடைமேடைகளுக்கு செல்ல பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.