திரைப்படம் பார்த்துவிட்டு இரவு முழுவதும் புதையலை தேடி மக்கள் கிளம்பிய சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் புர்கான்பூரில் அரங்கேறியுள்ளது.
சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கைக் கதையை தழுவி “சாவா” திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் விக்கி கௌஷல், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூரில் உள்ள ஆசிர்கர் கோட்டைக்கு அருகே புதைக்கப்பட்ட தங்க நாணயங்களைப் பற்றிப் பேசும் காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த காட்சியை கண்ட கிராமவாசிகள், அவ்விடத்தில் புதையல் இருக்கலாம் என நம்பி தோண்ட தொடங்கியுள்ளனர்.
இரவு பகலாக புதையலை தேடிய கிராம மக்களில் சிலர் மெட்டல் டிடெக்டரையும் பயன்படுத்தியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், மக்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.