மணிப்பூரில் பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
மணிப்பூரில் 2023-ம் ஆண்டு முதல் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், காம்கிபாய் பகுதியில் பேருந்து மீது ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பும் வேளையில் நடைபெற்றுள்ள இந்த தாக்குதல் சம்பவம் மக்களை மீண்டும் பதற்றமடைய வைத்துள்ளது.
இதையடுத்து, 114 ஆயுதங்களை பறிமுதல் செய்த பாதுகாப்பு படையினர் 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.