பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள் என்று கூறியது அதிமுகவை பற்றியல்ல என அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில்,
பாஜகவின் வளர்ச்சி மற்றும் எங்களது அரசியல் பற்றிதான் பேசினேன் என்றும் அதிமுக பற்றி எங்கேயும் குறிப்பிடவில்லை என அண்ணாமலை விளக்கம் அளித்தார்.
அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர் என அண்ணாமலை தெரிவித்தார்.