மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தை பார்த்து திமுக அரசு அஞ்சுவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரையில் அவர் அளித்த பேட்டியில்,
தமிழை வளர்ப்பது பாஜக, நாங்கள் இந்தியை திணிக்கவில்லை என தெரிவித்தார்.
6 மாதங்களுக்கு கூட்டணி பற்றி கேள்வி கேட்காதீர்கள் என்றும் 2026-ல் திராவிட மாடல் அரசு நீக்கப்பட வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
பாஜகவின் கையெழுத்து இயக்கத்தைப் பார்த்து திமுக அஞ்சுகிறது என்றும் பள்ளி மாணவர்களை வைத்து திமுக நீட் கையெழுத்து இயக்கம் நடத்தவில்லையா? என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.