மதுரையில் அமைச்சர் பங்கேற்ற மகளிர் தின விழாவில் எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என பெண்கள் குற்றம் சாட்டினர்.
திருப்பலை அருகே உள்ள மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர் மூர்த்தி பங்கேற்ற நிலையில், 500-க்கும் மேற்பட்ட பெண்களும் கலந்து கொண்டனர்.
சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சி முடிந்த பின்னரே மதுரை நிகழ்ச்சி தொடங்கியதால் பெண்கள் பலரும் கடும் அவதியடைந்தனர். மகளிர் தின விழாவில் மின்விசிறி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதி செய்துதரவில்லை என்றும் பெண்கள் குற்றம் சாட்டினர்.