தமிழகத்தில் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் பாஜக சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அடுத்தாண்டு தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்து பெண் அமைச்சர் தலைமையில் மகளிர் தினவிழா நடைபெறும் என உறுதி அளித்தார்.
திமுகவின் குற்றங்களை மறைக்க மும்மொழி விவகாரம் மற்றும் தொகுதி மறுசீரமைப்பை கையில் எடுத்து பிரச்னை செய்வதாக குற்றம்சாட்டிய தமிழிசை, தமிழகத்தில் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பாஜக கூட்டணியின் ஆட்சி அமைய வேண்டும் என சூளுரைத்தார்.