இசைஞானி இளையராஜா லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்துள்ளார்.
லண்டனில் உள்ள ஈவன்டின் அப்பல்லோ அரங்கத்தில், சரியாக லண்டன் நேரப்படி 7 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு இளையராஜாவின் சிம்பொனி இசை தொடங்கியது. இளையராஜாவின் இசைக் குறிப்புகளுக்கு நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இசைத்தது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
குறைந்தபட்சமாக 9 ஆயிரம் முதல் 31 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. நிகழ்ச்சிக்கு தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாகவே அங்கு ரசிகர்கள் படையெடுக்க தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மொசாட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகியோர் வரிசையில் இளையராஜாவும் சிம்பொனி இசை கலைஞர்கள் வரிசையில் இணைந்திருக்கிறார்.