கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் தொடர்புடைய 4 பேரை வரும் 21ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கடந்தாண்டு கள்ளச்சாராயம் அருந்தி 229 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 68 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கண்ணுக்குட்டி, அவரது மனைவி விஜயா உள்ளிட்ட 4 பேரை கடந்த 4ஆம் தேதி காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, 4 பேரையும் வரும் 21ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ஹரிஹரசுதன் உத்தரவிட்டார்.