காரைக்கால் அருகே உள்ள ஜடாயுபுரீஸ்வரர் கோயிலில் மாசி மகப் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
புதுச்சேரியின் காரைக்கால் அடுத்த திருமலைராயன்பட்டினத்தில் அமைந்துள்ள ஜடாயுபுரீஸ்வர கோயிலில் மாசி மகப் பிரம்மோற்சவப் பெருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு அலங்கார வாகனத்தில் சிவபெருமானும், அம்பாளும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்நிலையில், பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தியாகராஜர் புறப்பாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவ வாத்தியங்கள் முழங்க உன்மத்த நடனம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கண்டுகளித்தனர்.