பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பணியாற்றிய 2 பொறியாளர்கள் லஞ்சம் பெற்றதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கோயிலின் தலைமை அலுவலகத்தில் அயலக பணி பொறியாளராக பணியாற்றிய பிரேம்குமார் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் பிரேம்குமார் லஞ்சம் பெறும் போது கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இளநிலை பொறியாளர் முத்துராஜாவும் லஞ்சம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.